சீனா மகிந்தவுக்கே நண்பன் - இலங்கைக்கு அல்ல! நாடாளுமன்றில் சாட்டையடி
சீனா, இலங்கைக்கு நன்மை தரும் வகையில் எதனை செய்துள்ளது என்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கையை, சீனா கடன் பொறிக்குள் தள்ளவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி கூறியதை அடுத்து, அதற்கு சீன தூதரகத்தின் பேச்சாளர் நன்றி தெரிவித்திருந்தார்.
இதனை தமது நாடாளுமன்ற உரையின்போது விமர்சித்த சாணக்கியன், சீனா, இலங்கைக்கு நன்மை செய்யவில்லை.
தமது நாட்டின் நலனுக்காகவே அது இலங்கையை பயன்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்சவுக்கே சீனா நண்பராக இருக்க முடியும். இலங்கைக்கு நண்பர் அல்ல. மஹிந்த ராஜபக்சவுக்கு நண்பர் என்பதால், கோட்டாபயவின் சட்டத்தரணியான அலி சாப்ரியும் சீனாவை நண்பர் என்று கூறியுள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
