இலங்கை வரும் சீன குடிமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lanka
Chinese Embassy in Sri Lanka
By Sumithiran
இலங்கைக்கு பயணிக்கும் சீன பிரஜைகளை இலங்கையின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
கல்வி, வியாபாராம், தொழில் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளின் நிமித்தம் சீனாவிலிருந்து இலங்கை்கு வரும் சீன பிரஜைகள் அனைவரும் இலங்கையின் சட்டதிட்டங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமெனவும் இலங்கையின் மதம் மற்றும் கலாச்சாரங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வெண்டுமெனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் சீன பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு வரமுயன்றதையடுத்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி