சீனாவின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்: அதிர்ச்சியில் அமெரிக்கா(காணொளி)
இஸ்ரேலில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் ஏற்படுகின்ற இரைச்சலில் உலகில் வேறுபல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மோதல்களின் சத்தங்கள் முற்றாக கேட்க முடியாமலேயே போய்விட்டது.
உதாரணமாக உக்ரைனில் நடைபெற்று வரும் யுத்தம் சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்ற இழுபறிகள் இப்படி பல விடயங்கள் உலகின் பார்வைகளில் இருந்து அன்னியப்பட்டுச் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பனிப்போரில் அமெரிக்காவின் பலமான கடற்படை நீண்டகாலமாகவே சீனாவை அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
தென் சீன கடற்பரப்பில் சீனா நினைத்ததை செய்வதற்கு அது பெரும் சவாலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. குறிப்பாக அமெரிக்காவின் அணுசக்தியில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்கள் நகர்வெடுத்து சீனாவுக்கு மிக அருகிலேயே வந்து நின்று அச்சுறுத்திக் கொண்டிருந்தன.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களின் ஆபத்துக்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் பல முயற்சிகளில் சீனா பல மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாக மேற்குலக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
அதன்படி எங்களை கடந்து சென்று விட்டுள்ளதும் உலகின் இராணுவ விவகாரங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றதுமான சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் சுருக்கமாக ஆராயவிருக்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |