யாழ் மூளாயில் மோதல் பதற்றம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
யாழ் (Jaffna), மூளாய் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றையதினம் (21) இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பதற்ற நிலை
இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்பு தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு தனிநபர்களுக்கிடையிலான பிரச்சினை, நேற்றையதினம் இரண்டு குழுவினருக்கு இடையேயான பிரச்சினையாக மாறியது.
இதனைத் தொடர்ந்து தோன்றிய வன்முறையில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிலர் காயமடைந்தனர்.
இதன்போது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் அங்கு நேற்றில் இருந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



