தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக குறுகிய காலத்தில் தேங்காய்களை உற்பத்தி செய்யும் புதிய கலப்பின தேங்காய் வகை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
தேங்காய் விலை
இலங்கையில்(sri lanka) தேங்காய் விலை நாளாந்தம் உச்சம் தொட்டு வருவதுடன் சந்தையில் தேங்காயின் விலை நுகர்வோர் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சிறிய தேங்காய் ரூபாய் 140 இல் இருந்து ரூபாய் 180 தொடக்கம் 200 ஆக உயர்ந்துள்ள நிலையில் இது மக்களை மிகவும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இந்தநிலையில், தேங்காய் விலை உயர்வை தொடர்ந்து அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையில் தேங்காயை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது.
இருப்பினும், பொதுமக்களுக்கு தேவையான அளவு தேங்காய்கள் வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்