அமெரிக்கா விதித்த புதிய வரி...! ஆட்டம் காணும் உலக பொருளாதாரம்
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான வர்த்தக வரிகளை அமெரிக்கா (USA) விதித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப (Donald Trump), இந்தியா, சீனா, இலங்கை, பிரிட்டன் உள்ளிட்ட சுமார் 100 நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதித்துள்ளது.
இது உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத அளவு
இந்நிலையில், அமெரிக்கா (USA) விதித்த புதிய வரிகள் காரணமாக உலகளாவிய கோப்பி விலைகளும் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளன.
உலகின் முன்னணி கோப்பி உற்பத்தியாளராக உள்ள வியட்நாம் மீது அமெரிக்கா 46% வரி விதித்துள்ளது.
வியட்நாம் அமெரிக்காவிற்கு கோப்பி இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வெளிநாட்டுத் தயாரிப்பு கார்
இதேவேளை, இங்கிலாந்தை (UK) தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு அதிக வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான தனது கார்களின் ஏற்றுமதியை நிறுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவரின் ஆண்டு உற்பத்தியில் கால் பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடுமையான வரி
கடுமையான வரிகளுக்கு நீண்டகால தீர்வுகள் உருவாக்கப்படும் வரை, குறுகிய கால நடவடிக்கையாக ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் எட்டு கார்களில் ஒன்று அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும், டிரம்ப் விதித்த புதிய வர்த்தக விதிகள் காரணமாக வாகன உற்பத்தித் துறையில் 25,000க்கும் மேற்பட்ட நேரடி வேலைகள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
