தமிழக கோவையில் கொடூரம்...! மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை....! 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை
கோவை விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும் கோவை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[DBRTV0S]
கும்பலால் பாலியல் வன்கொடுமை
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் கல்லூரி மாணவி ஒருவர், மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

சம்பவத்தில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின்படி, சந்தேகநபர்கள் மூவரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே மறைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
காவல்துறையினர் மீது தாக்குதல்
இந்நிலையில், குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது அரிவாளால் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, காவல்துறையினர் சந்தேகநபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்