ஐரோப்பாவை வாட்டும் கடும் குளிர்..! பிரித்தானியாவுக்கு மூன்றாம் நிலை எச்சரிக்கை
வட அத்திலாந்திக் சமுத்திரம் மற்றும் வட துருவத்தின் மேல்மட்டத்தின் குளிர் நிலை ஐரோப்பாவை நோக்கி நகர்ந்துள்ளதால் ஐரோப்பாவின் வடக்கு மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் கடுமையான குளிர்காலம் தலைதூக்கியுள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தவரை ஏற்கனவே நாடளாவிய ரீதியில் மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிர் நிலை
இந்நிலையில் பல இடங்களில் உறைநிலைக்கு கீழ் மறை 10 பாகை செல்சியஸ் நிலவிவரும் நிலையில், இன்றிரவும் நாளையும் கடுமையான குளிர் நிலைமைகளை எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கும் பனிப்பொழிவு எச்சரிக்கையும் கடும் குளிர் காரணமான போக்குவரத்து தடைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடை
ஐரோப்பாவில் கடுமையான எரிசக்தி நெருக்கடி நிலவினாலும் மக்கள் தங்கள் வீடுகளின் உட்புற வெப்பநிலை குறைந்தபட்சம் 18 பாகை செல்சியஸ் அளவுக்கு உறுதி செய்ய வேண்டும் எனவும், தனிமையில் உள்ளவர்களுக்கு சூடான உணவு மற்றும் பானங்கள் கிடைப்பதை அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முயலவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.