கொழும்பில் அல்ஜசீரா செய்தியாளர் மீதும் நீர்த்தாரை பிரயோகம்(காணொளி)
கொழும்பில் நேற்று முன்தினம் மாணவர்களின் போராட்டம் ஒன்றைச் செய்தியாக்கிக் கொண்டிருந்த அல் ஜசீரா ஊடகவியலாளர் மினெல் பெர்னாண்டஸ் நீர்த்தாரை தாக்குதலுக்கு உள்ளானார்.
கடந்த ஆண்டு அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தின் போது தடுத்து வைக்கப்பட்டிருந்த செயற்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (IUSF) நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
நீர்த்தாரை பிரயோகம்
Al Jazeera’s Minelle Fernandez was hit by a water cannon while reporting on a students’ march in Sri Lanka’s capital to demand the release of activists detained during last year’s anti-gov't protests ⤵️ pic.twitter.com/jWGS7kKQE6
— Al Jazeera English (@AJEnglish) June 7, 2023
நுகேகொட விஜேராம சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், இதன் போது அல் ஜசீரா ஊடகவியலாளர் மினெல் பெர்னாண்டஸ் இந்த நீர்த்தாரை பிரயோகத்தில் சிக்கினார்.
