வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
Colombo
Kandy
Climate Change
Weather
By Thulsi
கொழும்பு (colombo) - கண்டி பிரதான வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் (Disaster Management Centre) விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்று (08) இரவு 7.30 மணி முதல் இன்று (09) அதிகாலை 01.00 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ (Kadukannava) பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கடுகன்னாவ பிரதேசத்தில் வீதியின் இருபுறங்களிலும் உள்ள ஆபத்தான கற்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.