ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Colombo Stock Exchange
By Beulah
இந்த மாதம் 30ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளமையை தொடர்ந்து, அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஜூன் 30 ஆம் திகதி வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வங்கி விடுமுறை
இதன்படி, அரசாங்கம் மற்றும் நிதியமைச்சு இணைந்து இம்மாதம் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
