சிறீதரன் எம்.பிக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S. Shritharan) மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்களைக் குவித்துள்ளதாகத் குற்றம் சாட்டி குற்றப்புலனாய்வுத்துறையில் (Cid) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளரான சஞ்சய் மஹாவத்த குற்றப்புலனாய்வுத்துறையின் நிதிக்குற்றப்பிரிவில் நேற்று (24) குறித்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும்
அத்துடன் குறித்த முறைப்பாட்டை தாம் வரவேற்பதாக தெரிவித்த அவர் நடத்தப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களின் சொத்துக்களைப் பராமரித்து வருவதாக முறைப்பாட்டாளர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
