சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகள்!
இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பு கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கடன்கள் 4 ஆண்டுகளில் தவணைகளின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது, முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்கள் சில தினங்களில் கிடைக்கவுள்ளது.
குறித்த கடன் ஒத்துழைப்பினை பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் இறுதிக்குள் முடிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் மற்றும் நியமங்களுக்கு அமைவாக ஊழலுக்கு எதிரான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வருமானம் கூடிய வர்க்கத்தினரிடம் இருந்து அதிக பங்களிப்பு செல்வ வரி விதிக்கப்பட வேண்டும்.
சொத்து மற்றும் சொத்து பரிமாற்ற வரிகள் 2025 க்குள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
நாட்டின் பணவீக்கமானது 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் 12%-18% ஆக குறைக்கப்பட வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஜூன் மாத இறுதிக்குள் நீக்கப்பட வேண்டும்.
நாணய மாற்று விகிதத்தில் நெகிழ்வுத்தன்மையை பேணுதல் மற்றும் பராமரித்தல்.
மத்திய வங்கியை சுதந்திரமாக செயல்பட வைத்தல்.
உறுதியான சமூக பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குதல்.
ஆகிய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
