சிறிலங்காவை விட்டு வெளியேறிய கோட்டாபய: உறுதிப்படுத்தியுள்ள வான்படை
Sri Lanka Airport
Gotabaya Rajapaksa
Maldives
By Kiruththikan
உறுதிப்படுத்திய வான்படை
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரின் துணைவியாருடன் மேலும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு சென்றமையை இலங்கை வான்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று சிறிலங்கா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு குடியேற்றம், சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த வானூர்தி வழங்கப்பட்டதாக வான்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று(13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து Antonov-32 விமானத்தில் மாலைதீவு நோக்கி பயணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

