மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா வைரஸ்
சிங்கப்பூர் (Singapore) மற்றும் ஹாங்காங் (Hong Kong) பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் 257 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் அனைவருக்கும் லேசான பாதிப்புகளே உள்ளதாகவும், கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைப்பு
இந்தநிலையில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது, கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
மேலும், உலக சுகாதார அமைப்பு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் தொற்று பரவுவது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
