யாழ்ப்பாணத்தில் ‘வாள்’ செய்தவருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மல்லாகம் நீதவான் நீதிமன்றம் மற்றொருவரை பிணையில் விடுவித்தது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நான்கு பேரை காங்கேசன்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.
வீடொன்றில் வாள் செய்து கொண்டிருப்பதாக
காங்கேசன்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணையின் பின்னர் இருவரை விடுவித்து விட்டு இருவரை மாத்திரம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
இதன்போது ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் மற்றொருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
