உறை பனி உயிரிழப்பை தடுக்க பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்
பிரித்தானியா முழுவதும் குளிர்காலத்தில் வீடுகளில் மக்கள் உறை பனி காரணமாக உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் வறுமையின் மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கவனத்தை ஈர்க்க செய்யும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் வறுமை
விண்ணை தொடும் எரிசக்திக்கான கட்டணங்கள், வீட்டிற்கான பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் சுத்தமான எரிசக்தி உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் எதிர்பாராத லாபத்தின் மீது வலுவான வரியை விதிப்பதன் மூலம் இதனை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சூழல் வெப்பநிலையானது வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் உள்ள 45 மில்லியன் மக்கள் எரிபொருள் வறுமையை எதிர்கொண்டுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதிக மானியத்துடன் கூடிய சுவட்டு எரிபொருள் பெருநிறுவனங்கள் சாதனைமிக்க அளவில் லாபத்தை ஈட்டி வருகின்றன என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 40 ற்கும் மேற்பட்ட முற்போக்கான குழுக்களால் கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அவசரகால மானியங்கள் மற்றும் மறுசீரமைப்பு
அவசரகால மானியங்கள் மற்றும் மறுசீரமைப்பு மூலம் எரிசக்தி கட்டணங்களைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிக்கும் அதேவேளை அதிக செலவுமிக்க மற்றும் பூமியை சூடாக்கும் சுவட்டு எரிபொருட்களை விட்டு விலக வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்கள் கடினமான குளிர்காலத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் அதற்கான தீர்வுக்ள என்ன வென்பதை நீண்டகாலமாக அனைவரும் அறிந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த குளிர்காலத்தில் அனைவருக்கும் வெப்பமூட்டக் கூடிய சூழலில் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
