உலகக்கோப்பையில் தோல்வியடைந்த போர்த்துக்கல் - கண்ணீருடன் வெளியேற ரொனால்டோ (காணொளி)
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது காலிறுதி சுற்றில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றதை அடுத்து ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறினார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர்.
ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
42-வது நிமிடத்தில் ஒரு கோல்
இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இந்நிலையில் இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
Cristiano Ronaldo eliminated from his last world cup?? pic.twitter.com/S3Kl87KWTC
— ? (@OthmanJr0) December 10, 2022
மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்போட்டியில் தோல்வியடைந்த நிலையில் போர்ச்சுக்கல் அணி வீரர்கள் கண்ணீருடன் வெளியேறினர்.
மனம் உடைந்த ரெனால்டோ
தோல்வியை அடுத்து உலக மக்களின் பெரும் ஆதரவை பெற்ற ரெனால்டோ மனம் உடைந்து மைதானத்தில் மண்டியிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
பல போட்டிகளில் அணியினை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற அவர் தற்போது இந்த உலக கோப்பை போட்டியில் தோல்வியை தாங்க முடியால் கண்ணீர் விடும் புகைப்படங்கள் இணைத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
