உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த ரஷ்யா
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பல்வேறு மேற்கத்தேய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதற்கு பதிலடியாக தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகள் அதனை தங்கள் பணமான ரூபெலில் தான் வாங்க வேண்டும் என ரஷ்யா அதிரடியாக அறிவித்தது.
இதனால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் ஜெர்மனி, போலந்து, பல்கேரியா, ஹங்கேரி, ஆஸ்திரியா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
ஐரோப்பாவின் 40 சதவிகித எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்து வருவதால் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தங்கள் பணமான ரூபெலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குமாறு ரஷ்யா அறிவித்த போதும், பல ஐரோப்பிய நாடுகள் அதை பின்பற்றாமல் தொடர்ந்தும் அமெரிக்க டொலரிலேயே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தன.
இந்த நிலையில், போலந்து, பல்கேரியாவுக்கு வழங்கிவந்த கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நேற்று அதிரடியாக நிறுத்தியுள்ளது.
