நான்கு வருடத்தின் பின் சொந்த மைதானத்தில் களம் காணும் சிஎஸ்கே
நான்கு ஆண்டுகளின் பின்னர் சொந்த மைதானத்தில் சென்னை அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.
குறித்த போட்டியில் சென்னை அணி லக்னோ அணியை எதிர்கொள்ளவுள்ளது.
சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்சின் சொந்த மைதானமாகும். ஏனெனில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருக்கிறது.
ருதுராஜ் நம்பிக்கை
இதற்கமைய ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று நம்பலாம் என கூறப்படுகிறது.
இதனையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது, "சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக விளையாடப்போவது உற்சாகம் அளிக்கிறது.
அணியில் நீண்ட துடுப்பாட்ட வரிசை இருப்பது சுதந்திரமாக விளையாட உதவுகிறது.சென்னை அணியின் பட்டியல் சிறப்பாக இருக்கிறது.
தொடர் செல்ல செல்ல அணியின் செயல்பாடு மேம்படும். இந்தாண்டு சென்னையுடன் மேலும் நல்ல நினைவுகளை ஏற்படுத்துவேன்." என ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்தார்.
