யூடியூப் தளத்தைத் தவிர ஏனைய சமூக ஊடக கணக்குகள் வழமைக்கு - காவல்துறை அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lanka
Cyber Attack
By Raghav
இலங்கை (Sri Lanka) காவல்துறையினது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தைத் தவிர அதன் ஏனைய அனைத்து சமூக ஊடக கணக்குகளும் மீட்டெடுக்கப்பட்டு, வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (31.12.2024) முற்பகல் இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் தளம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன.
காவல்துறை
இந்தநிலையில், அவற்றை விரைவில் மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை காவல்துறை முன்னெடுத்திருந்தது.
அதற்கமைய, இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ டிக்டொக், எக்ஸ் தளம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்