சீரற்ற காலநிலை செய்த மோசம்! முல்லைத்தீவில் 800 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு (படங்கள்)
மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பலத்த சேதம் பதிவாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குமுழமுழனை மேற்கு - கரடிப்பூவல் பகுதியைச் சேர்ந்த ந. இலக்குணநாதன் எனும் பண்ணையாளரது 22 பசு மாடுகள் இறந்துள்ளன.
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 648 மாடுகள், 166 ஆடுகள் உள்ளடங்கலாக 800 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை கடும் காற்று உள்ளிட்ட காரணங்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, மணலாறு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 181 குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.
வீடுகள் சேதம்
குறிப்பாக இந்த வீடுகளினுடைய கூரை பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததன் ஊடாகவும், காற்று காரணமாகவும் வீடுகளில் கூரைகள் சேதமடைந்து இருப்பதாகவும் அதிகளவானவை தற்காலிக வீடுகளே சேதம் அடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினுடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
