நிலைமை மோசமடையலாம் -இளைஞர்கள் தொடர்பில் வெளியான அபாய அறிவிப்பு
University of Colombo
Sri Lanka
By Sumithiran
மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் மதுபானங்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஞானதாச பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செயற்பாட்டை கட்டுப்படுத்த தவறினால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும்அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்கள்
நாட்டில் அண்மைக்காலமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றம், அதிகரித்துள்ள சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்கள் மற்றும் மதுபானங்களின் விலையேற்றம் என்பன இதற்கு காரணங்களாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

