மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்ட சடலம்! உதவி கோரும் காவல்துறை
மட்டக்களப்பு பொலநறுவை கொழும்பு பிரதான வீதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு தேக்கங்காட்டு சந்தியின் 120 ஆவது மைல்கலில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யானை தாக்கி உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவது குறித்து பிரதேச கால் நடை மேய்ப்போர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி
சம்பவ இடத்திற்கு காவல்துறையினருடன் வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறை குளிரூட்டியில் சடலத்தை 21 நாட்கள் வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சடலத்தை அடையாளம் காண்பதற்கு வாழைச்சேனை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்
