இறம்பொடை கோர விபத்து..! நேரில் சென்ற பிரதமர் ஹரிணி
புதிய இணைப்பு
நுவரெலியா - கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை இரவு பிரதமர் ஹரிணி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார்.
இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
மீட்பு பிரிவினருக்கும் நன்றி
இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு செயற்பாட்டு உதவிகளை வழங்கிய நல்லுலங்களுக்கும் நன்றி.
நாட்டில் உள்ள நல்ல விபரங்களையும் பாதுகாக்க வேண்டும் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது அனைத்தையும் விட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர்கிறார்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிறைவேற்ற கூடிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியைக் கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து விபத்து
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பேருந்து விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதோடு, இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இந்த விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலதிக நடவடிக்கை
"Clean SriLanka" திட்டத்தின் கீழ் இதற்காக ஒரு திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (11) காலை நடந்த இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளை தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதார பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





