செம்மணி மறைக்கப்பட்ட உண்மையின் வலி நிறைந்த சாட்சி! அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் கோரிக்கை
Sri Lankan Tamils
Sri Lanka
Australia
chemmani mass graves jaffna
By Dharu
செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள கிறீன்ஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
செம்மணி புதைகுழி
“உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள் மீது கட்டாயமாக நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இனப்படுகொலையை நினைவூட்டும் வகையில் செம்மணி புதைகுழி அமைந்துள்ளது.
29 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை.
எனவே செம்மணி உட்பட இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணை அவசியம்." எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்