கொழும்பில் ஆர்ப்பாட்டம் - காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு
SL Protest
By Vanan
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் சுகாதார அமைச்சிற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
இலங்கையில் கடந்த 2016ஆம் ஆண்டு டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரிவதற்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே தமக்கான நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி அவர்கள் இன்று காலை சுகாதார அமைச்சிற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் ஆர்ப்பாட்டக்கார்கள் மீது நீர்த்தாரை பிரயோக்கிக்கும் வகையில் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.




