மன்னாரில் மாணவர்களின் நெடுநாள் பிரச்சினையை தீர்த்து வைத்தார் கந்தையா பாஸ்கரன்(படங்கள்)
மன்னார் - ஆண்டான்குளம் பாடசாலை மாணவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் அவ் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு சென்று வருவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தினமும் பாடசாலைக்கு வருகை தரவும், பாடசாலையை விட்டு வீடு செல்லவும் சுமார் 3 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி அவசியம்
இதற்கு தீர்வு வழங்கும் நோக்கிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்கும் முகமாக கந்தையா பாஸ்கரன் துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைத்தார்.
இதன் போது கருத்துரைத்த அவர், வாழ்வில் முன்னேறுவதற்கும் ஒடுக்கப்பட்ட சமூகம் அல்லது ஒடுக்கப்பட்ட இனம் மீளெழுந்து வருவதற்கும் கல்வி மிக முக்கியமானது எனவே கல்வியில் மீண்டெழுந்து நல்லதொரு சமூகமாக முன்னேறவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த உதவியை வழங்கி வைத்த ஐபிசி, லங்காசிறி குழுமத்தின் தலைவருக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.



