தம்மிக்க பெரேராவுக்கு எதிரான மனுக்களை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!!
நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பதவியேற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகத்துள்ளது.
தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது, அரசியலமைப்பிற்கு முரணானது என கூறி அவர் நாடாளுமன்ற உறுப்பினராவதை தடுக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்ட போது, அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாதிருப்பதற்கு நீதியரசர் ஆயத்தின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த ஐந்து அடிப்படை உரிமை மனுக்களும் உயர்நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டன.
தம்மிக்க பெரேரா கொடுத்த வாக்குறுதி
இம்மனு தொடர்பில் நீதிமன்றம் தீர்மானம் மேற்கொள்ளும் வரை தான் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்றகப் போவதில்லை என நீதிமன்றத்துக்கு தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், அவர் நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

