கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா தொடர்பில் வெளியான தகவல்
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் 21ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
விரைவில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் அவர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த 9ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அவரது இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தம்மிக்க பெரேரா, நாட்டில் பிரபலமான பல வர்த்தக நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஆவார்.
