புலம்பெயர்ந்தோருக்கு நேர்ந்த துயரம் - நடுக்கடலில் மூழ்கிய படகு..!
புலம்பெயர்வோருடன் பயணித்த படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததால், அந்தப் படகில் பயணித்த 30 பேர் பரிதாபமாக பலியாகிய துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
லிபியாவிலிருந்து 47 புலம்பெயர்வோருடன் புறப்பட்ட குறித்த படகு மத்தியதரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
Benghazi என்ற இடத்துக்கு 110 மைல் தொலைவில், மோசமான வானிலை காரணமாக குறித்த படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிதாபமாக உயிரிழப்பு
Alarm Phone என்னும் தொண்டு நிறுவனத்துக்கு இந்த தகவல் கிடைக்கவே, அவர்கள் இந்த தகவலை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்கள். உடனே, அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த FROLAND என்னும் கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
?! 47 lives at risk in the Central Med!
— Alarm Phone (@alarm_phone) March 11, 2023
Alarm Phone is contact with 47 people in a boat adrift who fled from #Libya. Weather is extremely dangerous and immediate rescue is needed!! pic.twitter.com/w45b5mIzdI
என்றாலும், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 17 பேரைத்தான் அவர்களால் உயிருடன் மீட்க முடிந்துள்ளது.
மேலும், 30 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
