அரச வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை!
அரச வேலைவாய்ப்புக்களில் அனுமதிக்கப்படுதல் மற்றும் பதவி உயர்வு போன்ற விடயங்களில், பட்டதாரிகள் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனரா என அரசாங்கம் ஆய்வு செய்வதாக கூறப்படுகின்றது.
பொதுப் பணித்துறையின் ஓய்வுநிலை அரச உயர் அதிகாரிகளின் தகவல்கள் மற்றும் புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
அரசுக்கு எதிரான இவ்வாறானவர்களை அரச நிர்வாகத்தில் இணைக்கும் போது வலுவான ஒரு நிர்வாகத்தை பேணுவதில் சிக்கல் ஏற்படும் எனவும், அரச நிர்வாக சேவையில் புதிய நபர்களைத் தெரிவு செய்வதில் இந்த விடயமும் கவனத்தில் கொள்ளப்படும் எனக் கூறப்படுகின்றது.
காவல்துறை அறிக்கை
இதேவேளை, அரச சேவை , பொது நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது காவல்துறை அறிக்கையை மேலும் கடுமையாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
கலவர நடவடிக்கைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை திட்டமிடும் நபர்கள் தொடர்பில் புலனாய்வு அமைப்புகள் தகவல் திரட்டுவதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிர்வாகத்தை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
