புதிய பயங்கரவாத சட்டம் -ஆளும் கட்சிக்குள் வெடித்தது விரிசல்
Government Of Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Prevention of Terrorism Act
By Sumithiran
அரசாங்கம் கொண்டுவர எதிர்பார்த்துள்ள புதிய பயங்கரவாத சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் இந்த சட்டமூலத்தின் சரத்துக்களுக்கு உடன்பட முடியாது எனவெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்ததுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமாரும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
சட்டமூலம் சமர்ப்பிப்பதில் தாமதம்
கடந்த 25ஆம் திகதி சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க இருந்த நிலையில்,ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுவடைந்ததை அடுத்து குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி