தேசத்துரோகம் புரிந்த உக்ரைன் உயர் இராணுவ அதிகாரிகளின் பதவி பறிப்பு -அதிபர் அதிரடி
russia
ukraine
invasion
By Sumithiran
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் இராணுவ உயர் அதிகாரிகள் சொந்த நாட்டுக்கே துரோகம் செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.
அந்த வகையில் 2 உயர் அதிகாரிகளின் பதவிகளைப் பறித்து அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது,“ தங்கள் தாய்நாடு எங்குள்ளது என்பதை தீர்மானிப்பதில் இருந்து ஏதோ ஒன்று அவர்களை தடுத்துள்ளது.
அவர்கள் உக்ரைனிய மக்களுக்கு அளித்த விசுவாச உறுதிமொழியை மீறி உள்ளனர்” என குறிப்பிட்டார்.
அவர்களின் பதவி பறிக்கப்பட்டதை தெரிவித்த அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அவர்களின் தலைவிதி என்னாகும் என்பது பற்றி ஏதும் கூறவில்லை.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி