இந்திய எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்..! அதிதியாக மோடி
இந்த ஆண்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடுகிறார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று அவர் கார்கில் பகுதி படையினருடன் தீபாவளியை கொண்டிடாடுகிறார்.
இந்நிலையில், 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய இராணுவத்தினருடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
தீபாவளி கொண்டாட்டம்

2017 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018 ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019 ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.

இந்தநிலையில், பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள இராணுவத்தினருடன் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.