தமிழகத்தில் பரபரப்பு - முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்: தி.மு.க. MLA கைது
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (20.07.2026) அதிகாலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தெரியவருகையில், கோவில்பட்டியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்றது.
முதலமைச்சருக்கு மிரட்டல்
அந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியிலும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்ண்டேயன் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
ஆனால் புகார் எதுவும் வழங்காமல் திரும்ப சென்று விட்டனர். தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் வழங்கினர்.
இந்த நிலையில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆதரவாளர்கள் கோஷம்
மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர், மேலும் காவல்துறை வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

விளத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening