அமைச்சர் கெஹலியவின் அழைப்பை புறக்கணித்த மருத்துவர்கள்
அண்மையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அழைப்பு விடுத்த கலந்துரையாடலைப் புறக்கணிக்க இலங்கை மருத்துவ சங்கம் உட்பட மருத்துவத் துறை தொடர்பான பல சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
உள்நாட்டில் பதிவு செய்யப்படாத இந்திய விநியோகஸ்தர்களிடம் இருந்து மருந்துகளை வாங்க அமைச்சர் மேற்கொண்ட முயற்சி குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ சங்கங்கள் சுகாதார அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கலந்துரையாடலை புறக்கணிக்க
அதன் காரணமாக அமைச்சர் அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடலை புறக்கணிக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருந்து விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கவே அமைச்சர் இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
மருந்து தட்டுப்பாடு பாரிய நெருக்கடி
மருந்துகளின் விலை உயர்வு பிரச்சினையை விட தற்போது மருந்து தட்டுப்பாடு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் உட்பட ஏனைய மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்யும் முயற்சியை மருத்துவ சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்