ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கம் - இன்றைய நாணய மாற்று விகிதம்
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Dollars
By Vanan
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலர்
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 360.88 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 371.68 ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, நேற்றைய தினத்துடன் (3) ஒப்பிடுகையில் இன்று (4) சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட்
ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது ரூ. 402.02 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை விற்பனை பெறுமதியானது ரூ. 418.01 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்
குவைத் தினாரின் பெறுமதியானது ரூ. 1170.24 ஆக பதிவாகியுள்ள அதேவேளை, கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது ரூ. 99.81 ஆக காணப்படுகிறது.

