நல்லூரில் “வறுமையில் வாடும் மக்களுக்கான” களப்பணி - நீங்களும் உதவலாம்..!
யாழ். நல்லூர் ஆலய வளாக சூழலில் “சூழலுக்கு மீள்சுழற்சி - வறியவர்க்கு வாழ்வு மீட்சி”எனும் தொனிப்பொருளில் புதிய - பழைய பொருட்களை சேகரிக்கும் செயற்றிட்டம் இடம்பெற்று வருகிறது.
நல்லூர் கந்தனின் திருவிழாக் காணவரும் அடியவர்களிடம் இருந்து இதற்கான நன்கொடைகளை எதிர்பார்த்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இம்மாதம் 20,21,22,23,24 ஆம் திகதிகளில் யாதும் ஊரே அமைப்பு எனும் அமைப்பினரால் V4U UK தொண்டு நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் இக்களப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
நல்லூர் ஆலய வளாகத்துக்கு வரும் உதவும் கரம் கொண்ட பக்தர்கள், தங்களிடமுள்ள புதிய மற்றும் பழைய, ஆனால் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பின்வரும் பொருட்களை அங்கு அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு நிலையத்தில் கையளிக்க முடியும். (லிங்கன் ஐஸ்கிறீம் கடைக்கு முன்பதாக அமைந்துள்ளது)
கையளிக்கக்கூடிய பொருட்கள்
- உடைகள்
- கற்றல் உபகரணங்கள்
- இலத்திரனியல் உபகரணங்கள்
- உலர் உணவுப் பொருட்கள்
இவற்றை வறுமையில் வாடும் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேற் கூறியவற்றை தொகையாக வழங்க விரும்பும் நல்லுள்ளங்கள் மற்றும் எனைய வழிகளில் இச்செயற்பாட்டுக்கு உதவக்கூடியவர்கள் பின்வரும் +94 76 929 7645 vனும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.