ரணிலின் உத்தரவுகளை பின்பற்றக்கூடாது..!! முன்னாள் இராணுவத் தளபதி பாதுகாப்பு தரப்புக்கு அறிவுறுத்தல்
மோதல் உருவாகும் கடும் ஆபத்து
முப்படையினருக்கும் பொதுமக்களிற்கும் இடையில் மோதல் உருவாகும் கடும் ஆபத்து காணப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.
பாதுகாப்பு படையினர் ரணில் விக்ரமசிங்க வழங்கும் சட்டவிரோத, அரசமைப்பிற்கு முரணாண உத்தரவை செவிமடுக்ககூடாது, பின்பற்றக்கூடாது என சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரணில் அதிபருக்கான அதிகாரங்களை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளார்
ரணில் அதிபருக்கான அதிகாரங்களை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளார். தன்னைத் பதில் அதிபராக அறிவித்துள்ளார் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் வதந்திகள் பரவுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் ஏந்தாத அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் எனவும், ஊழல் அரசியல்வாதிகளிற்கு எதிராக சட்டத்தை பின்பற்றும் ஒழுக்கமான இராணுவம் என்ற வகையில் ஆயுதங்களை உயர்த்துமாறும் நான் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

