சி.ஐ.டியிலிருந்து வெளியேறிய சர்ச்சைக்குரிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Ranil Wickremesinghe
By Thulsi
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ருக்ஷான் பெல்லன இன்று (27) காலை சி.ஐ.டியில் முன்னிலையாகி இருந்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி அண்மையில் இடை நிறுத்தப்பட்டது.
சர்ச்சைக்குரிய கருத்து
பொறுப்புவாய்ந்த அரசாங்க வைத்திய அதிகாரி என்ற வகையில், உரிய அனுமதியின்றி ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தமை.

மற்றும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி