மட்டக்களப்பில் ஹோட்டலில் தங்கியிருந்த பிரதான போதைப்பொருள் வியாபாரி கைது
மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை நேற்று சனிக்கிழமை இரவு (15) கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் சம்பவ தினமான நேற்று இரவு ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் நகரிலுள்ள அம்மன் கோவில் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்டனர்.
ஹோட்டலில் தங்கியிருந்த பிரதான போதைப்பொருள் வியாபாரி
இதன் போது ஹோட்டல் அறையில் தங்கியிருந்துபோதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான வியாபாரியான முறக்கொட்டாஞ்சேனை காளி கோவில் வீதியைச் சேர்ந்த தனுஷன் என்பவரை 3200 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் அவருடன் இருந்த இன்னொரு வியாபாரியான சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த விதுஷன் என்பவரை 1300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சித்தாண்டி பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த போதை வியாபாரியான சதீஸ்வரன் என்பவரை 2500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்