முகப்புத்தகம் ஊடாக ஒன்றுகூடல் - ஒரேநாளில் கைதான 12 இளைஞர்கள்!
அவிசாவளை - குருகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் 12 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதாவக்கை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, 25க்கும் மேற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் அவர்களை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைதான இளைஞர்கள்
குறித்த விடுதியின் உரிமையாளர் முகப்புத்தகம் ஊடாக இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களில் கஹதுடுவ, பலாங்கொடை, எஹெலியகொட, அவிசாவளை மற்றும் குருகல்ல போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
