கடற்படையின் அதிரடி முற்றுகையில் மீட்கப்பட்ட பொதிகள்!
Sri Lanka Police
Jaffna
Mannar
Sri Lanka
Crime Branch Criminal Investigation Department
By Kalaimathy
வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார்-யாழ்.பிரதான வீதியின் வெள்ளாங்குளம் வீதித்தடுப்பில் லொறியொன்றை மறித்து சோதனையிட்டபோது 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளகஞ்சாவுடன் வவுனியாவை சேர்ந்த 37 மற்றும் 45 வயதான இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 24 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 12 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன
விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் லொறியுடன் இலுப்பைக்கடவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி