கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்!
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Sri Lanka Police Investigation
By Kanooshiya
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து 30 கிலோ கிராம் 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறை மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி 150 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணைகள்
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, தெற்கு கடலில் மற்றுமொரு போதைப்பொருள் படகு கைப்பற்றப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய திட்டத்தின் தென் மாகாண வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி