இரவு பகலாக சுழலும் பூமி: வைரலாகும் காணொளி
உலகில் தற்போது தொழிநுட்பம் எட்டமுடியாத உயரத்தை நோக்கி வளர்ந்து கொண்டு செல்கின்றது. அதன்படி, தினமும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலான புதிய விடயங்கள் இணையத்தில் பரவுகின்றன.
அந்த வகையில், 360 டிகிரியில் பூமி சுழலும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூமி அதன் அச்சில் சுழன்று கொண்டே இருக்கும் என்பதை நாம் புத்தகங்களில் படித்திருப்போம். எனினும், பூமி அதன் அச்சில் சுழல்வது எப்படி இருக்கும் என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.
சுழலும் பூமி
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் பொறியாளரான டோர்ஜே ஆங்சுக் பூமி அதன் அச்சில் சுழலும் காணொளி ஒன்றை X வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
A Day in Motion – Capturing Earth’s Rotation
— Dorje Angchuk (@dorje1974) January 31, 2025
The stars remain still, but Earth never stops spinning. My goal was to capture a full 24-hour time-lapse, revealing the transition from day to night and back again. @IIABengaluru @asipoec (1/n) pic.twitter.com/LnCQNXJC9R
குறித்த காணொளியில், பகல் இரவாகவும், இரவு பகலாகவும் மாறி, பூமி அனைத்து கூறுகளுடன் சேர்ந்து சுழன்றதை காணக்கூடியதாக உள்ளது.
அவர் பதிவிட்ட காணொளி ஒரு டைம்லேப்ஸ் காணொளி என்பதுடன் தற்போது அந்த காணொளி இணையத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)