மெதுவாக சுழலும் பூமி! 2029 ஆம் ஆண்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகுவதால், பூமியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள எடை அதிகரித்து வருகிறது, இது கிரகத்தின் சுழற்சியை பாதிக்கிறது.
பூமி மெதுவாக சுழல்கிறது. இதன் காரணமாக உலகில் நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். எனினும், ஒரு நொடி அளவில் மட்டுமே வித்தியாசம் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் வெளிநாட்டு நாளிதழ் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக துருவப் பனி உருகுகிறது. இதன் காரணமாக பூமி குறைவான வேகத்தில் சுழல்கிறது.
இதனால் 2029 ஆம் ஆண்டிற்குள் "நெகட்டிவ் லீப் செகண்ட்" என்று அழைக்கப்படும் மாற்றம் நடைபெற உள்ளது.
அதாவது நேரத்தில் ஒரு நொடி கழிக்கப்படும். இது கணினி நெட்வொர்க் நேரத்திற்கு எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்தும்.
பூமியின் எடை
துருவங்களில் பனி உருகும் போது, பூமியின் எடை குவிந்திருக்கும் இடத்தில் இருந்து மாற ஆரம்பிக்குமென கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபியின் புவி இயற்பியலாளரான டங்கன் அக்னியூ தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம், கிரகத்தின் கோண வேகத்தை பாதிப்பதோடு, கிரகத்தின் சுழற்சியையும் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகுவதால், பூமியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள எடை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |