ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவிற்கு கர்தினால் பதில்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் நசுக்கிய கோட்டாபய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksa) நடவடிக்கைகளையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் (Malcolm Cardinal Ranjith) தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
ஏன் நடைமுறைப்படுத்தவில்லை
தாக்குதலைத் தடுக்காத முன்னாள் அதிபர் மற்றும் அதிகாரிகள் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என பேராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்டாபயவின் அறிவிப்பு
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் அரசியல்வாதிகளால் மாத்திரம் முன்னெடுக்க முடியாதெனவும், காவல்துறையினருக்கும் குறித்த செயற்பாட்டில் பாரிய பங்கு இருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |