தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் அதிகாரிகள்! மேல் நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஜூன் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட நிரந்தர நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முன்கூட்டியே உளவுத்துறை தகவல் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் தங்களது கடமையை குற்றவியல் ரீதியாகப் புறக்கணித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதியரசர்களான பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வின் முன்னிலையில் இவ்வழக்குகள் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அடுத்த விசாரணை
இதன்போது, பிரதிவாதிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்குகளுடன் தொடர்புடைய இறுதி உரைகளை நிகழ்த்துவதற்காக, எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |