அரசாங்க ஊழியர் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை இரத்து
Government Employee
Government Of Sri Lanka
By Sumithiran
அரசாங்க ஊழியர்கள் சௌகரியமான ஆடைகளை அணியலாம் என பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2019 ஜூன் 26 மற்றும் 2022 செப்டெம்பர் 27 ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கைகளை பொது நிர்வாக அமைச்சு இரத்துச் செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.என்.பி.கே.மாயதுன்ன தெரிவித்தார்.
1989 ஆண்டு சுற்றறிக்கை
1989ஆம் ஆண்டு ஊழியர் தரத்திலான அரசாங்க ஊழியர்களின் சீருடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மாத்திரமே தொடர்ந்தும் செல்லுபடியாகும் எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
1989ஆம் ஆண்டு அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்கள் தேசிய உடை, ஐரோப்பிய உடை, காலர் சட்டை மற்றும் கால்சட்டை அணியலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மாயாதுன்ன தெரிவித்தார்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்